பக்கம்:உத்திராயணம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

る露 லா. ச. ராமாமிருதம்

  • சனியன்களா நெருப்பிலே சாக இங்கேதான் வேளை தேடினேளா..? மொத்து மொத்து... மொத்தல் இரண்டு பேருக்குமே விழுந்தது. கைப்பாத்திரத்தாலேயே தம்பி தலையில் நெத்தினாள். அவன் துடைத்துக்கொண்டு ஓடிப் போய்விட்டான். அவனை உத்தேசிக்கையில் எனக்குக் கிடைத்த தண்டனை ஒன்றுமேயில்லை.

நான் பேசாமல் போய் கூடத்தில் ஒரு மூலையில் உட் கார்ந்து கொண்டேன். வேதாளம் என்னுள் வேலை செய்ய ஆரம்பித்தது. அம்மா என்னை அடிக்கலாமா? இத்தனை நாள் பிரிஞ்சுட்டு ஊரிலிருந்து வந்திருக்கேனே! நன்னாப் படிக்கறேனே : ராமேசுவரம் போய் தவங்கிடந்து பெற்ற பிள்ளையாச்சே! அம்மா ஜாடையை வேறு அப்படியே உரிச்சு வெச்சிருக்குன்னு எல்லாரும் சொல்றாளே! நான் அப்போ எவ்வளவு அருமையாயிருக்கனும் புறுபுறுவுக்குப் பளிச் சென்று தனித்தனியாக வாதங்கள் உறுதி தெளிய வில்லை. ஆனால், அடிப்படை என்னவோ இதுதான். இது வாய்த்தானிருக்கணும்.

குங்குமப்பூ கூடத்துக்கு மிதந்து வந்தது. அம்மா ஒண்னு: குறை வைக்கமாட்டாள்.

  • சாப்பிட வாங்கோ பசங்களா!'

சிவா அப்பவே கையில் பொரித்த அப்பளத்துடன் சமையலறையிலிருந்து வந்தாச்சு அம்மா சாமிக்குக் கை யெல்லாம் சமையலறையிலிருந்தே காட்டிவிடுவாள். பாட்டி யிருந்தால் பூஜை, ஸ்தோத்திரம் இன்னும் அரைமணி நேரம் கூட ஆகும். பசி வயிற்றைக் கிள்ளிற்று.

அம்மாவே இன்னிக்கு எல்லாருக்கும் தாலங்களை அலம்பி வைத்துவிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/92&oldid=544181" இலிருந்து மீள்விக்கப்பட்டது