பக்கம்:உத்திராயணம்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. ஆஹா"

ஆஹ"தி 83

சாஸ்திரத்துக்கு முன்கலத்துக்குப் பாயசத்தைச் சொட்ட என்னிடம் வந்ததும் நான் இரண்டு கைகளையும் குறுக்கே மடித்துக்கொண்டு வேண்டாம் என்கிற முறையில் தாலத்தின் மேல் முதுகு வரை முகம் கவிழ்ந்தேன். அம்மாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

'இதென்னடா நாட்டியப் போஸ்? நிமிர் அப்புறம், நிறைய ஊத்தறேன்."

நான் பேசவில்லை. தலையை உரமாக ஆட்டினேன்.

எனக்கு வேலை தலைக்கு மேல் இருக்கு, நேரங் கிடத்தாதே. உன் விளையாட்டெல்லாம் அப்புறம். ஊம்!"

தாலத்தை மறைத்த கை கலையாமல் நான் அவளையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்னேங்கறே? பாயசம் வேண்டாமா?’’ வேண்டாம் என்கிற முறையில் தலையை ஆட்டினேன். வேண்டாம்?-சிரித்த முகம் இறுகத் தலைப்பட்டது.

வேண்டாம்?" அவ்வளவுதான். உருளியோடு தூக்கிக்கொண்டு போய்ப் படக் கென்று தொட்டி முற்றத்தில் சாய்த்துவிட்டாள்.

எனக்கு உடம்பு வெலவெலத்துப் போய்விட்டது. ஏன் உண்மையைச் சொல்கிறேனே-அரை நனைந்துவிட்டது. நான் எதிர்பார்த்தது இது அல்லவே! எல்லா அம்மாக்கள் மாதிரி: குங்குமப்பூ போட்டிருக்கேண்டா... கறந்த பாலைக் காய்ச்சிவிட்டிருக்கேண்டா... அத்தனையும் நெய்டா: உனக்குப் பிடிக்குமேன்னு பண்ணினேண்டா! உனக்குன்னு பண்ணினேண்டா! வேண்டாங்காதடா கண்ணுர...'

அட, என் வயதுக்கு மடியில் வைத்துக் கொஞ்ச வேண் டாம் ஒரு கண்ணுகிக்கு வயசு மீறிப்போயிடுத்தா என்ன?