பக்கம்:உத்திராயணம்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

部4 லா. ச. ராமாமிருதம்

அம்மாவைப் பார்க்கப் பயமாயிருந்தது. அவள் கண்கள் கொதித்தன. முகம் குங்குமப் பிழம்பாகிவிட்டது. என் தம்பி கள், தங்கைகள் அழ ஆரம்பிச்சுடுத்துகள், அம்மா ன்னு அலறிண்டு எல்லாரும் ஒடிப்போய் அவளைக் கட்டிண்டோம். எங்களை அனைத்துக் கொண்டாள்.

சமையலறையைக் குங்குமப்பூவின் மணம் துரக்கிற்று. யாகக்குண்டம் போல் தொட்டி முற்றத்தில் ஆவி புகைந்தது. முந்திரியும், வறுத்த திராஷைப் பழங்களும் அத்தனை முழி களாய் விழித்தன. சேமியா, ஆவியின் அசைவில் நெளிந்தது. அம்மாவின் கூந்தல் முடிச்சிலிருந்து ஒரு மல்லிப்பூ அதில் உதிர்ந்திருந்தது.

அன்றிரவு அம்மா மறுபடியும் சேமியா பாயசம் பண்ணி னாள். நன்றாய்த்தானிருந்திருக்க வேண்டும். அம்மாவுக்கு வேறெப்படியும் பண்ண முடியாது. ஆனால், இது சலித்த பாயசம் பண்ணி, நாங்கள் யாருமே சுவைக்காது ஆஹாதி யாகப் போன பாயசம்தான். பாயசம் எனக்கு,

அந்த நாளின் வேர்களே வேறு !

岑 踪 蕊

தாழம்பூ மணம் அறையில் பின்வாங்கி விட்டது. விளக்கைப் போட்டேன். சுவர் வெடிப்பில், பயந்தபடி எதை பும் காணோம்! ஆனால் வெடிப்பு இப்போ அங்கு மட்டுமல்ல.