பக்கம்:உத்திராயணம்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகிலா

வாசல் திரைச் சீலையைத் தள்ளியதும் கூடத்தில் கட்டிலில் படுத்திருந்த உருவத்தைக் கண்டதும் என் விலாசம் தேடல் முடிந்தது. உடனே தெளிந்துவிட்டது. அப்போது தான் எதிர் அறையிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்-பதினாறு, பதினேழு-என்னைக் கண்டதும் அவள் கண்கள் பூத்தன!

அம்மா! அவர் வந்துட்டார்!’ என்று சொல்லிக் கொண்டே நேரே என்னிடம் வந்து கைப்பெட்டியை வாங்கிக் கொண்டாள்.

நீதான் வைதேஹியா? சந்தோஷ வெட்கத்தில் முகம் லேசாய்க் குழம்பிற்று. மாநிறம்: குறு குறு.

என்னை எப்படித் தெரிந்தது உனக்கு?" முன்றானை யால் முகத்தைத் துடைத்த வண்ணம் அடுக்குளிலிருந்து அவள் தாய் வந்தாள்.

  • வாங்கோ: இதோ காப்பி கலந்துண்டு வரேன். வைதேஹி, மாமாவைக் கவனிச்சுக்கோ. வைதேஹி இன் னொரு அறைக்கு என்னை முன்னிட்டாள்.

என்னை எப்படித் தெரிந்தது உனக்கு?’’

  • கோமதி கடிதம் போட்டிருந்தாள்.'