பக்கம்:உத்திராயணம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகிலா 37

யோகிக்க முடியுமா? இடம் பார்த்து, எனக்கும் மனம் பிடித்த இடத்தில்தான் இந்த உரிமை கொண்டாடத் தோன்றும், கற்பனை ஸ்வரம் எழுவதுபோல்.

ஒரு அடுப்பில் உருளைக்கிழங்கு கறி வாணலியில் மொறு மொறுக்கிறது. அப்பளத்தைப் பொரித்து வடிகட்டியில் கூடு கட்டியிருக்கிறது. மாமி, பாயஸ்த்துக்கு அப்போத்தான் முந்திரிப் பருப்பை வறுத்துக் கொட்டிக் கொண்டிருக்கிறாள். கட்டை குட்டையான உடல்வாகு. மறுதீயில் இன்னொரு இலுப்பைச் சட்டியில் எண்ணெய் காய்கிறது. எவர்சில்வர் அடுக்கில் வடை மாவு, அதன் மேல் உருவி உதிர்த்த கறி வேப்பிலை,

என்ன மாமியிது?’’ நான் மாமியில்லே. அகிலா. பிறந்தாம் ஆணைக்கா. உங்கள் ஊர் லால்குடியில், இடறி விழுந்தால் சப்தரிஷியும் சீமதியும் போல், எங்களுரில் வீட்டுக்கு வீடு ஒரு அகிலாண்டம்.'

"என் தகப்பனார் பேர் சப்தரிஷி. என் அம்மா பூரீமதி , ' பார்த்தேளா, நான் சொன்னது சரியாப் போச்சு!’ 'சரி, என்ன இது அகிலா? மதுரையிலிருந்து ஊருக்குத் திரும்பற வழியில், கோமதியின் கட்டாயத்தில் இறங்கி ஒரு வேளை தங்கப்போறதுக்கு ஒரேயடியா அமர்க்களம் பண்ணிண்டிருக்கேள்!'

வந்த விருந்தாளிக்கு ஒரு பாயஸ்த்தை வெச்சுட்டா விருந்தாயிடுமா? என்னவோ எங்கள் சந்தோஷம். இதோ என் பிள்ளையும் வந்துட்டான். கோபாலா! நீ அந்தண்டை போனே, மாமா இந்தண்டை வந்துட்டா.”

சோகம் பாசி பூத்த அந்த முகத்தில் புன்னகை அரும்பு கட்டுகையில் ஏதோ மருட்சி. மழை காலத்தில் அருணோ தயம். முப்பது இருக்குமா? கூடக் காட்டுகிறது. உடல் சிறு கூடு. முதுகு லேசாக வளைந்திருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/97&oldid=544186" இலிருந்து மீள்விக்கப்பட்டது