பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபயோகமுள்ள உடல் நலக் குறிப்புகள்

51



ஒருவருக்கு உடல் உயரத்திற்கேற்ப உடல் எடை அமைந்திட வேண்டும் என்று வல்லுநர்கள் கணக்கிட் டிருக்கின்றார்கள். அந்த அளவுக் குறிப்பினைக் கீழே தந்திருக்கிறேன். எடை பார்த்துத் தடையை நீக்கிக் கொள்ளுங்கள்.

ஊளைச் சதையினைக் குறைக்க சில உடற் பயிற்சிகள் உண்டு. அவற்றை இங்கே தந்திருக்கிறேன்; செய்து பயன் பெறுக.

முதலில் மிகஎளிதில் செய்யும் 6 பயிற்சிகளைத் தந்திருக்கிறேன்.

1. நேராக நிமிர்ந்து நின்று இடது கையை உடலோடு சேர்த்துத் தொங்க விட்டபடி, வலது கையை முன்னும் பின்னும் கீழும் மேலுமாக சுழல் வதுபோல சுற்ற வேண்டும். மெதுவாக ஆரம்பித்து, வேகமாகச் சுற்றவும். அதுபோலவே இடது கையைச் சுழற்றவும்.