பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒரு தந்தையும் இருக்கிறார்...!



சே டை கட்டி
அண்டை இட்டுக் கொண்டிருந்த
அந்த ‘மண்வெட்டி மனிதனை’க் கண்டு,
கையில் டிரான்ஸிஸ்டரோடு,
காலில் வண்ணச் செருப்புப்
பளபளக்க வந்தவன்,
சற்று அருவருப்போடு எட்டியே
ஒரு கருவேல நிழலுக்குள்ளேயே
நின்று விட்டான்!


சேற்றுப் படுகையாக
கழனிப் பங்குகள்!
அழுகிய தழை உர வாடை!


“ஏண்டா தம்பி!
என்னா சங்கதி...
செருப்ப கழட்டிப் போட்டுட்டு
 இஞ்ச வாடா..!"