பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ.சண்முகம்

———————— 10


அண்டை போட்டுக் கொண்டிருந்த
‘மண்வெட்டி’ குரல் கொடுத்தது!


தழைஉர வாடையில் ஏற்கெனவேயே
முகத்தைச் சுளித்து கொண்டிருந்தவனுக்கு
அப்பனின் ஆணையும்
அழைப்பும் ஆத்திர மூட்டின!


“நான்லென்ஸ்!
ஒனக்கு வர வர
மூளைக் குழப்பம் அதிகமாவுது!
லோன் பணத்தை இன்னைக்கே
கட்டியாவனுமாம்.
ப்யூன் வந்து
கடுமையாச் சொல்லிட்டுப் போறான்!
அதைச் சொல்லி
ஒன்னைக் கூப்பிட வந்தா
என்னை நீ
சேத்திலே இறங்கி வாடாங்கிறே!
ஒன்னோட வச்சிக்க அதையெல்லாம்
நான் ஒம் மகன் உலகப்பன்தான்..!
ஆனா இந்த உலகப்பன் காலு
என்னைக்குமே
சேத்திலே படாது... தெரிஞ்சுக்கோ..!”
உதவிக்கு வேலை செய்து
கொண்டிருந்த இரண்டு, மூன்று
விவசாயக் கூலிகள்
தந்தையையும் - மகனையும்