பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11 ————————

உப்புமண்டித் தெரு


ஒரு மாதிரியாக
மாறி மாறிப் பார்த்தனர்.


உலகப்பன்,
ஒட்டமும் நடையுமாக வீட்டுக்குத்
திரும்பி விட்டான்...!
தேர்தல் நேரத்தில்
இந்த மாதிரி ‘உலகப்பன்’களுக்கே
திடீர் உத்யோகம் - உல்லாச கார் சவாரி
உடனடி ஊக்கத்தொகை
எல்லாம் வலியக் கிடைக்குமே!


அதுவும்,
அந்தத் தொகுதி வேட்பாளரின்
அந்தரங்கத் தோழர்களில்
முன்னணிச் செயல் மறவனாக
உலா வந்தவன் உலகப்பன் தானே...?


அவனுக்குக் ‘கட்சித் தொண்டு’
‘கொள்கை விளக்கம்’, ‘தேர்தல் பிரச்சாரம்’
இவைகளை விடவா
அப்பன் அய்யாக் கண்ணுவின்
‘அண்டை போடும்’, ‘களை எடுக்கும்’
‘நாற்று பறிக்கும்’, ‘அறுப்பு அறுக்கும்’
கலப்பை விவகாரம்
ரொம்ப உசத்தி...!
ச்சே...!