பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ. சண்முகம்

———————— 12


மகனின் மன ஓட்டம்
அய்யாக்கண்ணுவுக்கும்
அத்துபடியானதுதான்!
பல தடவைகளில்
அதை கட்டுப்படுத்தியும்
கட்டாயத் தடைவிதித்தும்
கெஞ்சிப் பார்த்தும்
தோற்றுப் போய் சுருண்டவன்தான்
அய்யாக்கண்ணு!


இருப்பினும்
உலகப்பனது இப்போதைய
உஷ்ண மிக்கச் சிற்றுரை
அய்யாக்கண்ணுவுக்கு
அடக்க முடியாத
ஆத்திரத்தைக் குத்திக்
கிளப்பி விட்டு விட்டது!


கிளம்பி விட்டான் வீட்டுக்கு!
‘லோன்’ பணம்
அன்றைக்கே - கட்டி விட வேண்டிய
நிர்பந்தம் வேறு
அவனது அமைதியான
சுபாவத்தையே சூடாக்கி விட்டது!


அய்யாக்கண்ணு
வீட்டுக்குள்