பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17 ————————|||||

உப்புமண்டித் தெரு

ஆமாண்டா உலகப்பா!
என்னோடே
அருமை மவனே!
இந்த சோத்திலே
கை வைக்க
இனிமே
துளி கூட
ஒனக்கு இஞ்சே
உரிமை இல்லேடா!


ஏன்னா,
இந்த சோறு
இருக்கே சோறு
அது என்னாத் தெரியுமாடா?


நீ
வயல்லே பாத்தியே
சேறு!
அதாண்டா!
அந்தச் சேறுதான்”!


அய்யாக்கண்ணுவின்
ஆவேசம்,
தன்னையே
ஒரு மாதிரியாக
ஆசு வாசப்படுத்திக் கொண்டு
அடங்கி விட்டது!