பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45———

உப்புமண்டித் தெரு



  இருபது வருடங்களுக்கு
  முன்பான இளமையை
  இப்போது
  மறுஒளிப்பதிவு செய்தன
  அவருடைய நினைவுகள்

.


  சில்க் பாஜி
  கோல்ட்ஃளாக் சிகரெட்
  அருணகிரியார் நாதராக
  இதே
  உப்புமணிடித் தெருவின்
  உல்லாசப் பூக்களிடம்
  அவர் விளையாடி
  சொகபோக விளையாட்டுகள்
  கொஞ்சமா நஞ்சமா ?


  வெள்ளமிட்டுப் பொங்கிய
  அந்த நினைவுகள்
  இப்போது உறுத்த
  வலிய அவற்றை விலக்க
  எத்தனித்தவராக கையிலிருந்த
  மீன்மார்க் மொத்திக் சுருட்டின்
  மீதியை
  முழு இழுப்பாக
  இழுத்து விட்டு
  காலடியில் போட்டு
  மிதித்தார்.