பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77————————

உப்புமண்டித் தெரு

தணலழகன் கோபத்தோடு இரைந்தான்!
பரமநம்பி
பவ்வியமாக
இனிய மெல்லிய
குரலில் பேசத் தொடங்கினார்!


எந்த ஒன்றை
நிஜமாக இல்லை என்று
எவன்
நிச்சயமாக நம்புகிறானோ,
அவன்
அந்த
'இல்லாத ஒன்றை’ப் பற்றி
இம்மியும் சந்தேகப்படவே மாட்டான்!
எந்த ஒன்றை
உருவமாகவோ
அருவமாகவோ
நிஜமாக
நிச்சயமாக உண்டு
என்று
எவன் நம்புகிறானோ
அவன்
அந்த
‘இருக்கும் ஒன்றை’ ப்பற்றி
அணுவளவும்