பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79————————

உப்புமண்டித் தெரு



அப்போதே
'கடவுள் இல்லை’ என்று
நீங்கள்
நிஜமாகவே
நிச்சயமாக
நம்புபவர்களாக
இருந்திருந்தால்–
மற்றவர்களுக்கு முந்தி
நீங்கள் தானே
வெளியே
ஒடி இருக்கவேண்டும்!
ஓடவில்லையே!
ஆண்டவனை
நான் காட்டுவேன் என்றதும்
நான் முந்தி
நீ முந்தி
என்று
இங்கே வந்து விட்டீர்களே!
கடவுளை
நான் காட்ட வேண்டும்
என்று
நீங்கள் பிடிவாதமாக
பிள்ளைத் தனமாக
வாதமிடுவதிலிருந்து
உங்களை அறியாமலே