பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83 ————————

உப்புமண்டித் தெரு


சாகடிக்கும் முயற்சியில்
ஒருநாள்
நீ
விஞ்ஞான வெற்றி பெறலாம்!


ஆனால் -
ஜீவகோடிகளின்
‘ஆத்மா’வினுடைய
ஒரே ஒரு
அணுத்துளியைக் கூட
நீ
படைத்து விடமுடியாது!


உனது விஞ்ஞானத்துக்கு
ஆத்ம பிரக்ஞை
அறவே கிடையாது!


அந்த
ஆத்ம உணர்வு
இல்லாத எதுவும்
இறுதியில்
துல்லியமாய்
தோற்றுபோகும்!