பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ. சண்முகம்

———————— 84



ஆகவே –
என்
அன்பு மகனே!
அறிவுமொக்கே!
‘விஞ்ஞானம்’ என்ற
வெளிப்பயணத்தை
‘மெய்ஞானம்’ என்ற
அசாதாரணமான
ஆழம் காணமுடியாத
உள்வெளி பயணத்தோடு
உரசவிடாதே!
ஒன்றுபடுத்தாதே!


இன்னும் சொன்னால் –
உனது விஞ்ஞானத்துக்கு
எங்கள் மெய்ஞானமே
‘ஏ, பி, சி, டி!’
நம்பு மகனே!
நம்பு!


போதும் இவ்வளவு!
புறப்படுங்கள் நண்பர்களே!
உங்களுக்குள்ள
கடமைகளையும்
காரியங்களையும்
அக்கறையோடும்
ஆசையோடும்

2