பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்கலாம்-வாழ்வும்-இலக்கிவமும்

உழைப்பின் சிறையில் கைதியாக எத்தனை நாள் வாழ்வது? தழைக்கும் ஒரு நூறாண்டு வாழ்வும் ஒருநாள் வாழ்வும் ஒன்றுதான்் குழைத்து மண்ணாய்க் குயவன் நம்மை மதுவின் குடமாய் மாற்றுமுன் தழைக்கும் மதுவைக் கிண்ணத்தாற்று, தலைநிமிர்ந்த வாழுவோம்.

ஒருகல் தொலைவு நீளும் ஒன்றை ஒளித்துவைக்க முடியுமா? பெருகும் காலப் புதிர்கள் தம்மைச் சொல்லும் ஆற்றல் பெற்றிலேன்; கருத்துக் கடலில் அறிவுகொண்டு முத்தெடுத்து வைத்துளேன், பொருத்தமாக இழையில் அதனைக் கோத்தளிக்க அஞ்சுவேன். என்றன் பகைவன் அறிவன் என்றே என்னைத் தவறாய் இயம்புவன். அன்னவன்சொல் உண்மை இல்லை, என்பதறிவான் ஆண்டவன். துன்ப உலகின் இருப்பிடத்தில் துவண்டு நானிங்கு இருப்பதால் என்னை யாரென்று அறியும் திறமை இல்லேன் நான் ஒர் எளியனே. 210 இன்ப ஊற்று, துன்பக்கேணிக்கான முதன்மை நாமடா, நன்மை தீமைச் சேம வைப்பும் அடிக்கல் நாட்டல் நாமடா, துன்னும் உயர்வும் தாழ்வும் பெற்று நிறையும் குறையும் உள்ள நாம் கொன்னல்ஆடி மூன்றுகாலம் அறிபூங்குன்றன் கன்னலோ?

98 த. கோவேந்தன்