பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்கலாம் வாழ்வும் இலக்கியமும்

கண்ணே, ஒளியிழந்தாயில்லை, கல்லறையைக் கண்டிரு, என்னே இந்த வெறுப்பும் கசப்பும் நிறைந்த உலகைக்கண்டிரு, மண்ணாள் மன்னர், அமைச்சர், இளங்கோ மண்ணுக்கு அடியில்புதைந்தனர், வெண்ணிலா முகங்கள் மண்ணில் சிதல் அரிக்கக் கண்டிடாய்!

சாகும்வரை இச் சதுப்பு நிறைந்த உப்புமண்ணில் மாந்தனேஆகப்பெற்ற அனைத்தும் அந்தோ அளவிலாத துன்பமே வேகமாய் இம் மண்ணைவிட்டோர் தாமே பேறு பெற்றவர் ஆக இன்னும் பிறவார் தாமே அமைதியில் திளைப்பரே!

தங்கு மனையாம் இந்தஉலகில் வெற்றுக் காற்றே உள்ளதாம் இங்கு முறைமை இல்லை அறமும் இல்லை எனலாம் செல்கிறேன், பங்கு கொள்ளும் இறப்பிருந்து தப்பினோர்கள் மட்டுமே இங்கென் இறப்பில் ஒன்றிணைந்து களிப்பில் மூழ்கித் திளைப்பரே. இல்லா விருந்தில் அழையா ஆளாய் அங்கிருப்பதைவிட உள்ள எலும்புத் துண்டில் நிறைவு கொள்ளும் கழுகாய் வாழலாம் இல்லாதார் செய் சுவை விருந்துக் கேங்கலின், உன் சொந்தமாய்க் கொள்ளும் பழஞ் சோற்றை உண்டு நிறைவுகாணல் உயர்ந்ததாம்.

| 00 த. கோவேந்தன்