பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்று ஓங்கி வரும் உவகையில் காதற்பாடல் களிபாடுவ தோடன்றி பத்தி வெள்ளத்திலே மூழ்கிய போதும்.

“சக்திப் புகழாம் அதை அள்ளு - மது
தன்னில் இனிப்பு ஆடும் அந்தக் கள்ளு”

என்றும்

‘மது’ - என்ற பாடலில் போகியும் போகியும் பாடும் ஆறு பாடலிலும் உண்மையையும் உருவகத்தையும் பாடுகிறார்.

“பச்சை முந்திரித் தேம்பழங் கொன்று
பாட்டுப் பாடிநற் சாறு பிழிந்தே
இச்சை தீர மதுவடித்து உண்போம்
இஃது தீதுஎன்று இடையர்கள் சொல்லும்
கொச்சை பேச்சிற் கை கொட்டி நகைப்போம்
கொஞ்சு மாதரும் கூட்டுனும் கள்ளும்
இச்சகத்தினில் இன்பங்கள் அன்றோ?
இவற்றின் நல்லின்பம் வேறு ஒன்றும் உண்டோ?”


“மாதரோடு மயங்கிக் களித்தும்
மதுர நல்லிசை பாடிக் குதித்தும்
காதல் செய்தும் பெறும்பல இன்பம்
கள்ளில் இன்பம், கலைகளில் இன்பம்,
பூதலத்தினை ஆள்வதில் இன்பம்,
பொய்மை அல்ல இவ் இன்பங்கள் எல்லாம்
யாதும் சக்தி இயல்பெனக் கண்டோம்,
இனைய துய்ப்பம் இதயம் மகிழ்ந்தே”

- என்று பாடி இறுதியாக,