பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நுண்ணறிவு தருகின்றது. படைப்பதற்கும் உடைப்பதற்கும் புத்துலக வாழ்வைக் கொணர்வதற்கும் பசியும் மிகப் பெரிய தவிப்பும் எழுகின்றன. அவற்றுக்குப் பின்னர்தான்் அவற்றின் தொடர்ச்சியாக நாம் மகிழ்ச்சியாக முடிகிறது. நாம் பேரின்பம் துய்க்க முடிகிறது. அதன் தொடக்க உணர்வின் வெளிப்பாடே பாரசிகப் பாவலன் உமர்கயாமின் வானமிழ்தம்

உமர்கயாமின் காலம் 1941 - ஆம் ஆண்டு அளவில் தெளிவாகத் துணிவாகத் தெரிவிக்க முடியாமல் இருந்தது. இந்தியப் பேரறிஞர் சுவாமி கோவிந்த தீர்த்தா அவர்களும், சோவியத்து அறிவியல் ஆய்வுக் களத்தினரும் என் நூற்கு மூல முதலாக பாரசிக இலக்கியத்தின் ஏடு தேடுபவர்களுமான பீடர் அவுரி, சான் ஈத் இசடெப்பும் (Peter Avery & John Health ) ஆகியோரின் அரிய முயற்சியின் தேடலுக்குப் பிறகு உமர்கயாம் 18மே – 1048 – பிறப்பு என்றும், இறப்பு 1131 – என்று உறுதி செய்யப்பட்டது.

இவர் வரலாறு பற்றி தமிழில் முன்னர் வந்த இருகட்டுரைகளைக் காணுங்கள்.

காதலின் வளர்ப்புப் பண்ணை.

“பாரஸிக தேசம் மதுவிற்கும் மதுரமான பாடல்களுக்கும் புகழ்பெற்றது; காதலின் வளர்ப்புப் பண்ணை. உமர்கய்யாம் என்ற நறுங்கனி முதிர்ந்து பழுத்தது இங்கேதான். இத் தேசத்தின் பண்டைப் புகழெல்லாம் இப்பொழுது மாய்ந்து விட்டது. ஆனால், இங்கிருந்த ‘ரோஜா’ உத்தியானங்களின் நறுமணத்தை இன்றும் உலகம் நுகர்ந்து இன்புறுகிறது. இன்றும் இங்கே விளைந்த காதல் மதுவை மனோபாவனையால் உலகம்