பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரவிவந்தனர் இம் மக்கள். ஆரிய மக்களைப்போன்றே இவர்களும் திடசித்த முடையவர் பாரஸிகர்களுக்கு அவர்களுடைய தேசத்தின் பெருமையைக் காட்டுகிறது என்ற அளவில் அது சீரியதாய் அமைந்த ஒரு சரித்திரமேயாகும். அப் பேரிதிகாசத்திலேயுள்ள அறிவுரைகளும், நீதிமொழிகளும், மக்களது நீண்டகால அனுபவங்களைப் பிரதிபலித்துக் காட்டுகின்றன. உண்மையான சரித்திரமாயிருந்தாலும், அல்லது விநோதமான புனைகதையாயிருந்தாலும், அந்நூல் ஒரு பேரிலக்கியம் என்பதில் ஐயமே இல்லை.

“இப் பேரிலக்கியத்தின் ஒரு பகுதிதான்் ஸோரப் - ருஸ்தம். இதில் வரும் சரித்திரத்தைப் பலரும் அறிந்திருக்கலாம். இதனை மாத்யூ ஆர்நால்ட் என்ற பேராசிரியர் கவிதை வடிவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேனாட்டினரிடையே பிரசித்தப்படுத்தியுள்ளார். ஷாநாமாவின் பெருமை இவ்வாறு மேனாட்டிலும் அறியப்படுவ தாயிற்று.

உமார்கய்யாம்

“இங்ங்ணமே வேறொரு பாரஸிகப் பாடலும் மொழி பெயர்ப்பு மூலமாக உலகப் பிரசித்தி அடைந்துவிட்டது. அது உமார்கய்யாம் என்ற கவிஞர் இயற்றிய ருபாயத் என்ற கவிதை நூலேயாகும்.

“இக் கவிஞரின் பெரும் புகழ் நமது தமிழ்நாட்டிலும் பரவி வருகிறது. இவரது பாரஸிகப் பாடலைக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மொழிபெயர்த்தது நமது பாக்கியம் என்றே கூறவேண்டும். தமிழ்நாட்டில் அவர் பெயர் என்றும் மங்காது