பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழர்களாய் இருவர் இருந்தனர். இவர்கள் தம்க்குள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டனர். தம்முள் யாரேனும் ஒருவர் உன்னத பதவியை அடைந்து செல்வர்களாய் விடுவார்களானால், அவர் மற்றை இருவருக்கும் உதவி செய்து, அவர்களைப் பதவியில் உயர்த்த வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம். வியக்கத்தக்க முறையில் ஒப்பந்தம் நிறை வேறியது. ஒருவர் ஒரு மாகாணத்தை ஆளும் பதவியைப் பெற்றனர். உடனே இவர் அரண்மனை ஸர்வாதிகாரப் பதவியைத் தம் தோழர்களுள் ஒருவருக்குக் கொடுத்தார். உமாருக்கு அவரது கணிதப் பயிற்சி இடையீடின்றி நடை பெறவேண்டும் என்று கருதி, ஆண்டுதோறும் ஒருபெருந் தொகையைக் கொடுத்துக் கவலையின்றி வாழச் செய்தனர்.

ருபாயத்

“இவ்வாறாகப் பணக் கவலை யாதொன்றும் இல்லாதபடி உமார்கய்யாம் தம்முடைய நீண்ட ஆயுளை, கணிதம் முதலிய சாஸ்திரப் பயிற்சியில் செலவிட்டு வந்தனர். இடையிடையே மக்களுடைய இம்மை, மறுமை முதலிய பொருள்கள் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து அற்புதமான செய்யுட்கள் பல இயற்றினர். இச் செய்யுட்களுக்கு ‘ருபாயத்’ என்று பெயர். ருபாயத் என்றால் நான்கடிச்செய்யுள் என்று பொருள். தமிழிலுள்ள நாலடியார் என்ற நூற்பெயரை இதனோடு ஒப்பிடலாம்.

பாடல்களின் அடிநாதம்

“இவர் சிந்தித்துக் கண்ட முடிவு இன்ப உணர்ச்சியை விளைக்கத் தக்கத்தன்று. இவர் பாடல்களிலே வாழ்வு