பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முடிந்ததன்பின் மறுமையைக் குறித்து யாதும் உறுதியாகக் கூறமுடியாது என்ற கொள்கை தொனித்துக் கொண்டே இருக்கிறது. இவ்வுலகத்தில் உண்பதும், குடிப்பதும், சுகித்து வாழ்வதும் தான்் க்ைகண்ட பலனோ என்று இவர் ஐயுறவு கொண்டனர். ஒரு சோக உணர்ச்சிதான் இவரது பாடல்களின் அடிநாதமாய் அமைந்துள்ளது” எஸ். வையாபுரிப் பிள்ளை.

பாரசீக நாட்டில் நைஸாப்பூர் என்ற ஊரில் இமாம் மொவாபிக் என்ற ஒரு பெரியார் இருந்தார். அவர் ஜனங்களுடைய நன்மதிப்பையும் மரியாதையும் வெகுவாகப் பெற்றவர். அவரிடம் குரானும் மதநூல்களும் பயிலும் எந்தப் பையனும் முன்னுக்கு வந்து சுகமாக வாழ்வான் என்பதில் மக்களுக்கு அசையா நம்பிக்கை இருந்து வந்தது.

“மூன்று மாணவர்கள் இமாமிடம் ஒன்றாகப் பயின்றார்கள். மூவரும் புத்திசாலிகள் இயற்கையில் உயர்குணங்கள் அமையப் பெற்றவர்கள். ஒரு நாள் அவர்களில் ஒருவன் மற்ற இருவர்களிடம், இமாமிடம் படிக்கும் எந்த மாணவனும் அதிர்ஷ்டசாலிகளாகாவிட்டாலும், நம்மில் எவனாது ஒருவன் நல்ல நிலைக்கு வருவதுபற்றிச் சந்தேகமேயில்லை. ஆகவே நம்மில் எவன், உயர் பதவியை அடைந்தாலும், அவன் மற்ற இருவர்களுக்கும் தன் அதிர்ஷ்டத்தையும் சுகத்தையும் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்” என்றான். மூவரும் இதற்கு ஒப்புக்கொண்டு தமக்குள் அவ்வாறே ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.