பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பிக்கையுண்டு. விதியே அவருக்குக் கடவுள். ரோஜா மலர்கள். திராட்சை ரஸம், அந்த ரஸம் ததும்பி வழியும் பரத்திரம், அதை ஊற்றும் ஜீவனுள்ள பெண், இவைகளுக்குள் அவருடைய வேதாந்தம் பரவியிருந்தது. மதுவைப் பற்றி அவர் பாடியிருப்பதற்கு மேல் பாட முடியுமா என்பது சந்தேகம். அவர் ஒரு சமயம் மதுவே குடிப்பதில்லை என்று சபதம் செய்துகொண்டாராம். புத்தி தெளிவாக இருந்திருந்தால் அப்படிச் சபதம் செய்திருக்க மாட்டாராம்.

விட்டுவிடுவோம் கள்ளே,
வேண்டாம் எனப் பலகால்
திட்டமிட்டேன் - எனினும் அப்போ
தெளிவோடு இருந்தேனோ?

என்று அவர் தம்மைத் தாமே கேட்டுக் கொள்ளுகிறார்.

“உமர் மது, மாதர் என்றெல்லாம் பாடியிருப்பதற்கு வேதாந்தபரமான உட்பொருள் வேம் உண்டு என்ற சிலர் சொல்லுவர்.

“உமர்கயாமைப் பற்றிச் சொல்லும்பொழுது அவருடைய ‘ருபாயாத்தை’ ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த எட்வர்ட் பிட்ஜெரால்ட் என்பவரை அவசியம் குறிப்பிட வேண்டும். இவருடைய காலம் 1809 - 1883, இவர் 1853ஆம் ஆண்டு ‘ருபாயத்’தை இயற்றினார்.அவருடைய இங்கிலீஷ் ‘ருபயாத்’ எல்லையற்ற புகழ்குப் பின்னால் ராஸெட்டி, ஸ்வின்பர்ன் முதலிய ஆங்கிலக் கவிகள் அதைக் கண்டெடுத்துப் பாராட்டிய பிறகு அது உலகப் பிரசித்தம்டைந்தது. நமது ஹிந்துஸ்தான்த்தின் சம்ஸ்கிருத நூல்களை எட்வின்