பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் இருபதாம் நூற்றாண்டின் இடையில் கவிமணி தேவியும் - பாலபாரதி ச.து.சுபோகியாரும், பின்னர் சாமி சிதம்பரனாரும் பாட்டாக்கம் செய்தனர்.

பாரசீக மொழியின் நேர்மொழியாக்கமில்லாமல் தன் போக்கில்தான் எட்வர்டு பிட்சொரால்டு ஆங்கில யாப்பில் செய்துள்ளார்.

A Book of verse beneath the bough,
A Jug of wine, a loaf of bread and thou
Beside me singing in the wilderness
O, wilderness were Paradise enow!


இதனைக் கவிமணி:

வெய்யிற் கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கய்யிற் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையந் தனில்இவ் வனமின்றி
வாழும் சொர்க்கம் வேறுளதோ?

மேற்படி பாடலை ச.து.க. யோகியார்:

மாதவிப் பூங்கொடி நிழலில்
மணிக் கவிதை நூலொன்றும்
தீதறு செந்தேன் மதுவும்
தீங்கனியும் பக்கத்தில்