பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கற்பவர் மூன்று பாடல்களையும் ஒப்பு நோக்கி உணர்க. மூலப் பாரசிகப் பாடலின் ஒலியமைப்பை ஓர் அறிஞர் வழி அறிந்தேன். உண்மையான பாட்டு மொழிக்கெனத் தனி அளவும் வரம்பும் பொருண்மைக்கேற்ப உள்ளன. அவற்றைத் தான் யாப்பு என்கிறோம். அதனைப் பின்பற்றியே என் மொழி நடை

புதிய தேடலில் மற்றும் ஒரு பாட்டு. ஆங்கில அமைப்பு இது:

If the firmament were ins my hand asin God's,
I would have razed it from the midst;;
I would have made another firmament such that
The free of heart might easily attain their desire

இதனைக் கவிமணி

அன்பே யானும் நீயும் இசைந்து
அயலில் எவரும் அறியாமல்
வன்பே உருவாம் விதியினையும்
வளைத்துள்ளாக்கி முயல்வோமேல்
துன்பே தொடரும் இவ்வுலகை
துண்டுதுண்டாய் உடைத்துப்பின்
இன்பே பெருகி வளர்த்திடுமோர்
இடமாய்ச் செய்ய இயலாதோ?

ச.து.சு. போகியார் இதனை:

காதலியே, ஈசனுடன்,
கலந்தோமேல் இப்படைப்பில்