பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மோது துன்பக் கோளம்எலாம்
முழுவதும் கைவசப்படுத்திப்
பொட்டெனவே போட்டுடைத்துப்
புதுமையுற நெஞ்சத்துக்கு
எட்டும்வகை இன்பத்தால்

இழைத்துப் படைப்போமே. இவ்விரு பாடலையும் விஞ்சும் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையாரின் நேர்மையான நம்பிக்கையான மொழியாக்கம் இதோ.

“காதல் அணங்கனாய்! நீயும் நானும் சேர்ந்தால்
காதோடு மூக்கில்லாக் காசினியின் கூட்டையெல்லாம்
மோதித் தகர்த்துத் துகளாக்கி அத்துகளைக்
காதல் உளநேர்வில் மீட்டுரு ஆக்குவமே”

திட்ட நுட்பம் செறிந்த பாட்டாக்கத்திற்குச் சான்று இது.

என் தமிழாக்கம் இது:

இறைவன் கையில் இருக்கும் விண்என்
கையகத்தில் இருந்திடில்
பொடிப்பொடியாய் நொறுக்கி அதைப்
பூண்டோடு அழித்து ஒட்டுவேன்
தடைகள் அற்ற என்றன் காதல்
வேட்கை தழுவும் வகையிலும்
படைத்தளிப்பேன் நானும் மற்றோர்
இனிய புதிய விண்ணகம்!

மூல மொழிபெயர்ப்பே சொன்மையில் முரண்பட்டுள்ளது. எனவே பாட்டிலும் பொருண்மை புத்துருவம் பெற்றுள்ளது.