பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உமர்கயாம்

வண்ணமிக்க எழில்முகம் மாதுளம்பூக் கன்னமும்
சண்பகத்தின், தளதளப்பும் வடிவம் கொண்ட என்றனை
பண்பிறைச்சீர் ஓவியன் படரும் மாசு பழந்திடும்
மண்ணின்காட்சிக் கூடம்தன்னில் வைத்ததேனோ? அறிகிலேன்!


குழப்பம் என்ற ஒன்றிணைத்துக் கொண்ட வாழ்வு தத்தனன்
சலிப்பினோடும் என்றனைத் தவிர்க்கொணா உடைத்தனன்
பிறப்பிருப்பு இறப்பிவற்றின் நோக்கம் ஏதும் இன்றியே
விருப்பிலாது வேறுவேறாய் விலகிப் பிரிந்து கொண்டிட்டோம்


எனது வரவால் விண்சுழற்சிக் கேதும் ஆக்கம் இல்லையே
எனது பிரிவால் அதற்குப் பெருமை ஏற்றம் எதுவும் இல்லையே
எனது வருகை எனது செல்கை ஏன் எதற்கு என்பதை
எனது செவியில் ஏறும் வண்ணம் இனிதுரைப்பர் இல்லையே