பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளமே ஓ, இப் புதிர்க்கு விடைகள் ஒன்றும் கண்டிலை
தெளளியசீர் அறிவர் தேடும் முடிவை எட்ட்வில்லையே
கள்ளருந்திக் குறைவிலாத களிப்பில் ஆழ்ந்து திளைத்திடு
கொள்ளை இன்பம் மறுமையில்நீ கொள்வதென்ன உறுதியே?


வாழ்வின் பொருளை உள்ளம் உணர வகை இருக்கக் கூடுமோ?
வீழ்வின் போது மெய்ப்பொருள்தன் விழுமம் தன்னை அழுத்திடும்
ஆழ்ந்து நின்னைக் கொள்ளும்போதில் அணுவும் உன்னை அறிகிலாய்
சோர்ந்து நாளை உனை இழந்தால் அறிவதெதனைச் சொல்லுவாய்?

5

கடல் முகத்தில் கல்லடுக்கிக் கரை அமைக்க முடியுமா?
கடவுள் மீதும் கோயில் மீதும் கருத்திழுந்து சலித்திட்டேன்,
தொடரும் நிரயம் ஏதடா? அவற்றிக்கு உரியர் யாரடா?
படரும் துறக்கம் ஏதடா? துறக்கம் சேர்ந்தார் யாரடா?


ஈறிலாத காலக் கமுக்கம் நீயும் நானும் அறிந்திலோம்
சீரிலாத இவ் வினாவின் சிக்கலிழக்கத் தெரிகிலோம்
போர்த்தி ரையின் இந்தப் பக்கம் நீயும் நானும் வாழ்கிறோம்
ஆர்த்த திரைதடான் வீழும்போது, நீயும் நானும் இங்கிரோம்