பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடலை ஒத்த இந்த வாழ்க்கை இருளிருந்து பிறந்தது
படரும் உண்மை வாழ்வின் ஒளியை ஊடு சென்று பார்த்ததியார்?
அவரவர்க்குத் தகுந்த வண்ணம் அவரவர்தாம் பேசினார்
எவரும் உண்மை முகத்தின் தன்மை இன்னதென்று இயம்பிலர்.


விண்முகத்தைச் சூழ்ந்த கோள்கள் விளக்கி எதையும் கூறிடா
ஒண்திறங்கொள் அறிவர் யார்க்கும் ஐயம் உண்டு பண்ணிடும்
திண்மை கொள்நீ அழிவுக் கயிற்றில் சேர்ந்த பிடியை விட்டிடேல்
வண்மை சேர்அவ் ஆற்றல் கூட மயங்கி மயங்கிச் சுழலுமே.


வந்துவந்து போகின்றோம் நாம் வாழக்கை என்னும் வட்டமோ
அந்தம் ஆதி எதுவும் அற்ற தெளிவிலாத காட்சியாம்
எங்கிருந்து வந்தோம் என்றும் எங்குச் செல்வோம் என்பதும்
இங்கு யார்க்கும் தெளிவும் இல்லை, ஏதும்புரிய வில்லையே.

10

இறைவன் வையம் பொருள்.அனைத்தும் எழில்கொழிக்க இயற்றிப் பின்
சிதையும் வண்ணம் சீரழிக்கச் செய்வதென்ன பொருளிலோ?
அருமையாக அமையுமாயின் அதை உடைப்பதேனடா?
பெருமை குன்றுமாயின் அந்தப் பிழைக்கு யார் பொறுப்படா?