பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நல்வினைக்காம் உடுக்கள் இல்லை, துயர நாள்கள் பெருக்கிடும்
நல்கல் எவையும் நிலைஇலை; மீண்டும் பறித்துக் கொள்ளுமே.
அல்லல் உற்று மண்ணில் நாம் அவதிப் படுதல் காண்டிடில்
வந்து பிறவா மாந்தர் இங்க வர நடுங்கு வார்களே.


ஐந்து யூத விளைவும் நீ ஏழு கோள்கள் வார்ப்பும் நீ
ஐந்தும் ஏழும் அடுத்தடுத்து அமைதியன்றிச் சுழல்வதால்
மைந்தனே நீ மது அருந்து மாண்டால் மீண்டும் வந்திடாய்
ஐந்திரண்டு நூறு முறை நான் அடுத்தடுத்துக் கூறினேன்


சூளையில் என் மண்ணிசை சுட்டெடுக்கும் வேளையில்
ஆளும் தொல்லை துன்பங்கள் அனைத்தும் அங்குச் சேர்ந்தன,
மேலும் நானும் என்னிலும் சிறந்து மேவல் எங்ங்னம்?
நானும் அன்று வாரித்த வண்ணம் நானாகவே இருக்கிறேன்.

30

சுடர்கொள் தொழுகை விளக்கையும், தீயின்கோயில் புகையையும்
நிரயத் துறக்க இயல்பையும் நெடிது பேசி என் பயன்?
விதியின் பலகை பாரடா விளைவு முழுதும் காணலாம்!
இறைவன், காலம் தொடங்குமுன் எழுதிவைத்த வண்ணமே!