பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெஞ்சமே இவ் உலகின் மெயமை நிழல் உளளிடு அற்றதரம்
மிஞ்சும் இந்தத துன்பம் பற்றி எத்துணை நாள் புலம்புவாய்?
அஞ்சிடாய் இவ் உடம்பினை விதியிடத்தில் விட்டிடு,
கெஞ்சினாலும் மிஞ்சினாலும் விதியின் எழுத்து மாறுமோ?


விண்ணகம் எனக்கிதை விளம்பிற்றிது கேளடா,
என் விதிதான் யாதென இங்கு நீ அறிவையோ?
எண்ணம் போல என் சுழற்சி எனது கையில் இருக்குமேல
முன்னமே இச் சுழறசியை முற்றும் விட்டிருப்பேனே!


நன்றும் தீதும் அவர்வாதம் மனத்தின் நாட்டம பெற்றன,
இன்பம் நமது பேறு, துன்பம் எண்ணம் விளைத்த விளைவுதான்
பின்னும் கோள்கள மீது சுமத்தும பிழைகள், ஏதும் இல்லையே
நின்னிலும் பல்கோடி மடங்கு நிலைக்கு அடிமை அவைகளே


வாழ்வின் இளமை நூலின் கால ஏடு முடிந்துவிடடது.
வாழவின் இனிய வேனிற் காலம் வரட்டும், வாடையாயிறறு,
வாழ்வின் இளமை என அழைக்கும பருவம் வருதல் முடிந்ததும்
ஆழ்ந்து காண முடியவில்லை என்ன அவல வாழ்விது!

35