பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்காம் வாழ்வும்-இலக்கியமும்

     அறிவர் தங்கள் விருப்பிற்கு ஏற்பக் கால ஆழி சுழலுமா? நெறிசெல் கோள்கள் ஏழு எட்டு என்று நினைக்கும் கணக்கும் பயனிலை முறியும் ஆர்வம் மறையும் வாழ்வின் முடிவும் உறுதி ஆதலால் எறும்பு ஒநாய் எது தின்றாலும் இரண்டும் மண்ணில் ஒன்றுதான்். 40 விண் உதிர்க்கும் மழையின் துளியும் விழுந்த கடலில் ஒன்றிடும் மண் உதிர்க்கும் சிறிய துகளும் மண்ணினோடு கலந்திடும் இந் நிலத்தில் வரவினாலும் இறப்பினாலும் என் பயன்? கண்முன் தோன்றிப் பறந்து மறையும் ஈக்கள் போலும் நாமடா!
   பகுத்தறிந்த படைப்பினாலே வனைந்தெடுத்த பாண்டமே மிகுந்த அன்பின் கையணைப்பில் மேவிற்றெண்ணில் முத்தமே வகுத்த உலகக் குயவன் இதனை அருமையாகச் செய்தனன் தொகுத்தெடுத்தோன் மீண்டும் அந்த மண்ணை மண்ணோடெறிந்தனன். இந்த வாழ்வின் நிலையிலாத வகையை நீயும் வினவுவாய், அந்த உண்மை சொல்வோமாயின் அஃதோர் நெடிய பெருங்கதை, முந்தும் ஆழி இருந்துவந்த வாழ்க்கை வகை ஆனதாம் வந்த கணமே மீண்டும் அந்த ஆழிக்குள் மறைந்ததாம்.
                45
த.கோவேந்தன்