பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பற்பலவாம் அங்கமாகிப் பாண்டம் வடிவம் கொண்டது, கட்குடியன் அதனை உடைக்க உரிமை ஏதும் இல்லையே எத்தனையோ இனிய தலைகள் கால்கள் கைகள் கொண்டன அத்தனையும் யாரின் அன்பால்? யாரின் வெறுப்பால் உடைந்தன?

        உலகம் உனக்காய் உருவு கொண்டு படைக்கப்பட்ட தாயினும் உலகறிஞர் தவிர்த்த ஒன்றை ஒடி நீயும் தேடிடேல் உலகில் உனைப்போல் வருவோர் செல்வோர் எண்ணடங்கார், ஆதலின் உலகம் உன்னைப் பறிக்கும் முன்னர் உன்றன் பங்கைப் பறித்துக்கொள் 45 இந்த நெடிய வழியில் சென்ற பேர்கள் பலுருள் திரும்பியே வந்தவர்யார்? கண்ட கமுக்கம் வாயுரைத்தார் எவருளார்? இந்தப் பிறப்பு இறப்பு இரண்டு வழியை அறிந்து தேவையைச் சிந்தியாமல் நுகர்ந்து கொள்நீ மீண்டும் தரும்பல் இல்லையே. துணையும் இன்றி நண்பர் தோழர் எவரும் இன்றி மண்ணினில் இணையப் போகும் ஒருத்தனே நீ இனியமதுவை ஏந்தி உண் பிணையும் இந்தப் புதிரை எவர்க்கும் சொல்லிட்ாமல் காத்திடு, மண்ணில் மலர்ந்து உதிர்ந்த மலர்கள் மீண்டும் மலர்வதில்லையே.
             46 த. கோவேந்தன்