பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்வும் இலக்கியமும்

வாழ்வேதான்் இலக்கியம், இலக்கியமேதான் வாழ்வு. மாந்தனின் மூன்று படைப்புகள் அவனை உயர்த்தின. ஒன்று கலந்துறவாடும் மொழி, இரண்டு தீ மூன்றாவது உருளை (சகடம்). இம் மூன்றும் இன்றேல் மாந்த சமுதாயம் விலங்காண்டி நிலையிலேயே உயிரினங்களில் ஒன்றாய் இருந்திருக்கும். மாந்தன் சிந்திக்கின்ற உயிருருவாய் விழிப்புற்ற போதுதான் பட்டறிவு படைப்பறிவாய்ப் பல்லாயிரம் எல்லைகளில் விரிவுற்றது. வாய்மொழியான தாய்மொழி படிப்பறிவைத் தோற்றுவித்து இலக்கியப் படைப்பினை பன்னுறு மொழிகளில் வாழ்வை எதிரொலித்தது. கனவைக் கற்பித்தது. உழைப்பு மேலும் மேலும் உள்ளொலியையும் உள்ளொளியையும் உணர்வில் ஊறி உணர்ச்சியாய் வெளிப் பட்டது.

ஆறாவதறிவின் பேராளனாக மாந்தன் மாறியதும், நிலைத்திணையினும் இயங்கு திணையினும் உயர்ந்து விட்டான் மாந்தன் எனவே தான்