பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

=u*svirtù sirgslið_{Nsoš:lw{più

மதுக்கடைக்கண் முதியோன் தன்னைக் கண்டு நானும் வினவினேன் “இதுவரைக்கும் இருந்து சென்றோர் செய்தி ஏதும் தெரியுமா?” 'மது அருந்த வந்து நம்மைப் போலச் சென்றோர் பற்பலர், இதுவரைக்கும் திரும்பி வந்தோர் எவரும் இல்லை” என்றனன். அங்கும் இங்கும் எங்கும் என்று சுற்றிச் சுற்றி அலைந்துளேன், கங்குக்ரை அற்ற உலகின் எல்லை யாவும் திரிந்துளேன், இங்கிருந்து சென்றவர்கள் திரும்பி வந்த தில்லையாம், தங்கி இருந்தோர் சென்ற சாலை திருப்பம் அற்ற சாலையாம்.

விண்ணகத்தின் ஆண்டைஅவன் ஆட்டிவைக்கும் பாவை நாம் உண்மை இஃது புனைந்துரைக்கும் உருவகம் ஈதல்லவே, கொண்ட வேடம் பூண்ட மட்டும் கூத்தாங்கில் நடிக்கிறோம், கண்டதென்ன அடுத்தடுத்துக் காட்சி விட்டு மறைகிறோம். x 50

நீண்ட நாள்கள் வாழ்வதில்லை நிலமும் பொறுப்பதில்லையே .பூண்ட பெயரோ புகழின் குறியோ நிலைத்திருப்பது இல்லையே

ஈண்டு முன்நாம் இருந்ததில்லை, உலகிற்கு இழப்பும் இல்லையே மாண்ட பின்னும் மடிவதில்லை. வையம் என்றும் இருக்குமே.

48 த. கோவேந்தன்