பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

è–io#swirtù sirgafw_Slošálw6pid

உலகமீதில் காண்டபதென்ன உறங்குகின்ற பேர்களே: உலகின் அடியில் காண்பதென்ன? உறக்கம் கொண்ட பேர்களே: உலகில் என்றும் காண்பதென்ன? வெறுமை வெறுமை வெறுமையில் உலகில் இருந்து மறைந்தோர் பிறவார் தம்மையே நான் காண்கிறேன்.

தங்கிச் செல்லும் பழைய விடுதி இதனை உலகம் என்கிறோம் கங்குல் பகலாம் கருமை. வெண்மை கலப்பிலான ஒய்வில்லம் பொங்கும் மன்னர் பலர் நுகர்ந்து கழித்த விருந்துக் கூடமாம் இங்கு நூறு வல்வில் ஒரி உறங்குகின்ற கல்லறை.

பொற்கலத்தில் மதுவை ஏந்திப் பூரித்திருந்த அரண்மனை, பொற்றை ஆடு நரிகளுக்குப் புகலிடமாய் ஆயிற்று; ஒற்றை வில்லில் நாலைந்து உயிர்கொல் ஒப்பில் வல்வில் ஒரியை இற்றைக் கெங்கே கல்லறைதான்் வேட்டையாடி வீழ்த்திற்றே.

செஞ்சிக் கோட்டை மலையின் மீது செம்போத்து ஒன்று திரிந்துயின் செஞ்சி மன்னன் சிலையின் மீது கூர்உகிர் கொண்டுற்றது, விஞ்சும் உன்றன் முரசம் எங்கே? மணிஒலிப் பண் எங்கெனக் குந்தி இருந்து கேட்டதைய, வெட்கம் வெட்கம் வெட்கமே! 55