பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

e–uoở south_evujeith_@so**)"(più

விண்ணளாவி வீறுயர்ந்து வெற்றி கண்ட அவ்விடம், மண்டி இட்டு மன்னர் எவரும் வணங்கி நின்ற அரண்மனை கொண்ட அந்தக் கொத்தளங்கள் எங்கே எங்கே என்றொரு வண்புறாத் தான்் வாய்திறந்து வினா எழுப்பல் கேட்டிரோ?

அருமை வாய்ந்த என்றன் உன்றன் உயிரிரண்டும் அகன்றபின் பெருமையாகக் குழியின் மீது கல்லிரண்டு பரப்புவர், வருகை கொள்ளும் அடுத்தடுத்து மாண்டவர் தமக்கெலாம் உருவம் ஆக்க நமது துகளை ஒன்றிணைத்துக் கூட்டுவர். மண்ணின் ஒவ்வொர் துகளும்கூட வானில் ஒளிரும் பருதியின் வண்ண மிக்க கன்னிமாடம், வைகறைமீன் நெற்றிகாண், கொண்ட ஆடை உதறும்போது விழிப்புணர்வு கொண்டிரு. கண்மனக்கும் கவின்மிகுந்த முகங்கள் ஆகும் அவையுமே.

ஆன்றவிந்த சான்றோரே நீர் விடியற் போதில் விழிமினோ, ஏந்தி நின்று துகள் சலிக்கும் இளைஞனை நீர் நோக்குவீர் தோன்றல் கரிகால் வளவன் அறிவைத் தொண்டைமானின் விழியினை ஈன்ற குழுவி எடுப்பதைப்போல் எடுத்து வைக்க இறைஞ்சுவீர்.

50 த. கோவேந்தன்