பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்கலாம்-வாழ்வும் இலக்கியமும்

எனைப் படைத்தோன் துறக்கத்திற்கோ இன்னல் நரகிற் காகவோ தினைத் துணையும் அறிகிலேன் நான் தெளிவிலாத ஒன்றிது; இனிக்கும் கிண்ணம், காதல்துணை, இசைப்பண் மூன்றும் இருந்திடில் தனித்த செல்வம் அவை துறக்கம் வெறுங்கடன் சீட்டாகுமே. இந்தப் புடவிப் பரப்பில் நமக்குத் தங்குதற்கோர் இடமில்லை, செந்நிறத் தேன் மதுவும் மாதும் இல்லையாயின் வாழ்விலை, இந்த உலகின் இயற்கை பற்றி ஆர்வம் அச்சம் ஏனடா? சென்ற பிறகு நிலைப்பும் படைப்பும் எனக்கு இவ் உலகில் ஒன்றுதான்். என்றன் விருப்பம் கருதியா நான் இந்த உலகில் வந்தனன், சென்று மறைதல் தான்ும் என்மேல் வலிந்து திணிக்கப் படுதலால் அன்தச் சிறுவ, கச்சை இறுக்கிக் கட்டி விரைந்தெழுந்து வா, கொன்றழிக்கும் உலகின் துயரைக் குடிக்கும் மதுவால் கொல்லுவேன்.

வாழ்வின் இறுதி எய்தும்காலை வடக்கும் தெற்கும் ஒன்றுதான்், ஆழ்ந்த கிண்ணம் நிரம்பும் போதில் இனிப்பும் கசப்பும் ஒன்றுதான்், வீழ்ந்து மகிழ்வில் திளைத்திருப்போம் காலம் நம்மை விழுங்கினும் ஒங்கு நிலவு வளரும் தேயும்; உலகம் மாயை இல்லையே! 95

61 த. கோவேந்தன்