பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2-toirætuirtð eitrýsitð SN9o&sálu 6pið

ஆர்வத்தோடு மது உண்டாடும் அவர்கள் வழியில் செல்லடா! ஈர்க்கும் மங்கை, இனிய மதுவும் இசையும் தேடிக் கொள்ளடா! சேர்க்கும் மதுவின் கிண்ணம் கையில், மதுவின் தோற்பை தோளிடம் திளைப்பாய் மதுவைக் காதற் பெண்ணேவாயலப்பல் தேவையா?

எனது வேணவாக்கள் சிறுவ! எழும்பும் கூச்சல் ஆயின, எனது குடியின் வெறியும், மிஞ்சி எல்லை கடந்துவிட்டது, எனது நரைத்த தலையும்கூட மயக்கத்திற் குள்ளானதே, இனிய மதுவால் முதிய உள்ளம், இளமை வீறு கொண்டதே.

கிண்ண நிறைய மதுவும் செஞ்சொல் கிளர்த்தும் பாடல் நூலுடன் உண்ணும் சுவைசேர் உணவும் போதும்! உனக்கு நான் எனக்கு நீ! பண்ணிசைக்கும் இன்பம் நம்முள்! பாலை நிலத்தில் வாழினும் மண்ணும் மன்னர் செல்வ வாழ்வின் மேலதாகும் நம் வாழ்க்கையே.

புறத் தோற்றத்தின் மெய்யும் பொய்யும் நன்கு நானும் அறிந்துளேன் அகத்தில் தோன்றும் ஒவ்வோர் எழுச்சி வீழ்ச்சியும் தெரிந்துளேன் இதற்கு மேலாம் அறிவுகொண்டு, குடியின் வெறியைத் தாண்டிய சிறப்பின்நிலை உண்டென்று கொள்ள நானும் வெட்கம் கொள்கிறேன்.

63 த. கோவேந்தன்