பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எவ்வளவு அழகானது இந்த உலகம் எத்தனை கோடி இன்பம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று முழு இயற்கையின் விளையாட்டிலும் பங்கேற்பதே நமது வாழ்க்கை. அன்புறவோடும், நன்றியுணர்வோடும் அறவுணர்வோடும் நாம் ஆடிப் பாடுவதே வாழ்க்கைக் கலை. மகிழ்ச்சியின் கூத்தும் சிரிப்பும் மாந்தனுக்கன்றோ கிட்டியுள்ளது. இவற்றின் எதிரோலியே இலக்கியக்கலை.

ஒவ்வொரு மாந்தனும் இந்த உலகத்திற்கு ஒரு குறிப்பிட்ட செயலுக்காகவே உடலுழைப்பு - அறிவுழைப்பு வருகிறான். அவன் நிறைவேற்ற வேண்டியது ஏதோ ஒன்று உள்ளது. உடல் - மன உழைப்பால் கொடுக்க வேண்டிய பணி ஏதோ உள்ளது. நாம் நேர்ச்சியால் வரவில்லை. ஆண் பெண் அன்புறவால் ஒரு பொருளுடன் பிறந்திருக்கிறோம். நம் பின்னால் ஒரு நல்ல உயர் நோக்கும் இருக்கிறது. வாழ்க்கை அறவியலில் முழுமை நம் மூளை ஏதோ செய்யக் கருதுகிறது. அதில் ஒன்றுதான்் பாட்டிலக்கியம்.

பன்னெடும் காலமாகப் பாட்டிலக்கியப் பாவலன், பல நாடுகளில் பலமொழிகளில் கார்க்கானாறாகவும், கருத்தருவியாகவும் ஆர்வமும் எழுச்சியும் அக்கறையும் அன்பும் கொண்ட ஆறாகவும், இன்னிளவேனிலின் பன்மலர் மணத் தென்றலாகவும், தீப்பறக்கிற சூறாவளியாகவும் விளங்கு கின்றான். மாந்தன் அனைத்தையும் செய்ய முடியும் என்ற துணிவினால்தான். ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ - என்று நாட்டுப் பற்றும் நவில் இனப் பற்றும் கொண்டுயர்ந்தான். “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்றான். சிந்தனைக்கு உணவளித்து அளித்து