பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்காம் வாழ்வும் இலக்கியமும்

என்றன் அன்பே, எழுந்திராய், நீ எழிலால் துயரைத் தீர்த்திடாய், நம்மின் உள்ளம் தெளிவு கொள்ள நறவின் குடத்தை ஏந்திவா, நம்மின் மண்ணால் மதுக்குடந்தான்் நாளைவனையப் போகுமுன் ஒன்றிணைந்து மது அருந்தி உலக இன்பம் துய்ப்பமே. குரானின் கூற்றே இறுதிக் கூற்றென்றவர்கள் சொல்லிக் கொள்கிறார், இராவும் பகலும் அல்ல அதனை எப்போதோதான்் ஒதுவார், பராவும் மதுவின் கிண்ண விளிம்பில் பதித் தவரிகள் தம்மையோ பராவி என்றும் எவ்விடத்தும் பருகுவார் செம் மதுவினை. 145

மது அருந்தல் இல்லையேனும் மது உண்போரைக் கடிந்திடேல்: மது அருந்துவோரை மீட்க மாய வலைகள் வீசிடல் மது அருந்த மாட்டேன் என்று மார்பு தட்ட வேண்டுமா? மதுவோர் கூறு தான்டா நீ மீண்டும் தீனிப் பெருக்கிலே.

சிதலமான மூலையில் நாம் மதுவும் இசையும் சேர்ந்துளோம், மதுவின் மண்டி நெஞ்சம் உள்ளம் துணிகள் யாவும் கறைபடும் கடவுள் அருட்கோ தண்டனைக்கோ கவலை சிறிதும் இல்லையே மதிக்கும் மண் விண் நெருப்பு நீரின் கட்டிருந்து விடுபட்டோம்.

78 த. கோவேந்தன்