பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்காம் வாழ்வும் இலக்கியமும்

ஒடைப் புனல்போல் பாலை மீதில் ஒங்கும் புயலைப் போலவே பீடையான வாழ்வின் கடின நாள்கள் தாமும் ஓடின, ஊடு நெஞ்சில் கவலை கொள்ளா நாள்கள் இரண்டு தாமுள; ஒடிப்போன "நேற்று”ஒன்று "மறுநாள்”மற்றது ஆகுமே. நீயும் நானும் தோன்று முன்னே, இரவும் பகலும் இருந்தன; ஒய்விலாத வானக் கோள்கள் உருண்டும் திரிந்தும் ஒடின; தேயும் உன்றன் கால்கள் மண்ணின் முகத்தைத் தொட்ட இடத்திலே பாயும் அன்புக் காதல் ஒருத்தி கண்ணின் மலர்கள் இருந்தன. உனது சூழல் ஒத்திருக்கும் போதே மகிழ்வில் ஒங்குவாய், - உனது விதி நீ தேர்ந்ததில்லை, அறிஞரோடும் ஒத்திரு. உனதுடம்பின் கூறனைத்தும் மண்ணும் காற்றும் கலந்தவை, கனமிலாத துரும்பும் மூச்சுக் காற்றம் உன்றன் உடலமே.

களிப்பில் திகழும் அல்லிசைப்புள் காவில் நுழைந்து செம்மலர் ஒளிச்சிரிப்பும், மதுவின் கிண்ண உவகைதனையும் கண்டது. கிளர்ச்சி ஊட்டும் ஆவலோடு கிசுகிசுத்த என்னிடம் “ஒளிவில் வாழ்வில் ஊறித் திளைநீ ஒடும் வாழ்க்கை மீண்டிடா” 155

80 த. கோவேந்தன்