பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்கலாம் வாழ்வும் இலக்கியமும்

மது செம் மணியின் நீர்மம், சேமக் கலயம் மண்ணின் சுரங்கமாம், இது நம் உடலம், ஏந்தும் கிண்ணம், இன்னுயிர்ப்பே செம்மது; மதவினோடு சிரிக்கும் அந்தப் பளிங்குக் கிண்ணம், நெஞ்சத்தின் உதிரம் உள்ளே மறைந்திருக்க ஒழுகும் கண்ணிர் ஆகுமே. செம்பரத்தை மலர்கள் செழித்துப் பள்ளத்தாக்கில் சிலிர்ப்பவை, இந் நிலத்தை ஆண்ட மன்னர் குருதியால் சிவந்தவை, மின்னி ஒளிரும் குவளை மலர்கள் மண்ணில் செழித்தவை எலாம் அன்பில் காதற் பெண்ணின் அழுகுக் கன்னக் கதுப்பின் மச்சமாம். 165 அதியன் அஞ்சி அரசின் மேலாம் ஒரு மடக்கு மதுச்சுவை, உதியஞ் சேரல் அரசுகட்டில் மிக்கதாகும் ஒருதுளி, நடிக்கும் வேடதாரி, இறைமுன் பாடும் தொழுகை மேலதாம் விடியற் போதில் உதவாக்கரையின் நெட்டுயிர்ப்பின் ஏங்கொலி.

நேர்ச்சி என்னும் களத்தினிலே ஆடப்பட்ட ஒன்றது, ஆட்ட விதிகள் வரைந்த நாளில் அங்கிருந்தது இல்லையே, சாக்குச் சொல்லல் போல இன்றுதான்் இடைக்கண் வந்தது மீட்டும் நாளை யாவும் மாறிப் பழைமை போல நிற்குமே.

84 த. கோவேந்தன்