பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தான்மர்ந்து வரூஉம் மேவற்றாகும்”

என்றான் தொல்காப்பியன். இன்பம் பொதுப் பண்பாயினும் அவ் இன்பத்தை எடுத்துரைக்கத் தெரிந்தவன் மாந்தன் ஒருவனே. ஒன்றும் உறவு ஒன்ற்ா உறவு என்று ஓர் ஒழுங்கு முறையை ஏற்படுத்திக் கொண்டபிறகு எல்லையை வகுத்துக் கொண்டபிறகு ஒன்றிய உறவுக்கு நட்பென்றும் காதல் என்றும் தோழமை என்றும் பெயரிட்டனன். எனவேதான் ‘மாதர் காதல்’ - ஆயிற்று. காமத்திற் சிறந்தது. காதற் காமம் ஆயிற்று. “மலரினும் மெல்லியது காமம், சிலர் அதன் செவ்வி தலைப்படுவர்” என்றான் வள்ளுவன். மேலும் “கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள” என்றறிந்து “அறிதொறும் அறியாமை கண்டற்றால், காமம் செறிதொறும் சேயிழை மாட்டு” என்றுணர்ந்தவன் சிற்றின்பமா இல்லை இல்லை பேரின்பம் கண்டான். ‘உடம்பொடு உயிரிடை என்னமற்றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு’ எனப் பிரிவறியாது வாழத் தலைப்பட்டான். காதலியே வாழ்க்கைத் துணையானாள் வாழ்வின்பம் நுகர்ந்தான் - மயக்குறு மக்களை ஈன்றான். ஏறுபோல் பீடு நடை நடந்தான். இவ்ற்றுக்கெல்லாம் காரணம் அன்பின் வழியது உயிர் நிலை என உணர்ந்து உலக வாழ்வில் உயர்ந்தான்் சிறந்தான். அவனே பாவலனானபோது

“செம்புலப் பெயல் நீர்போல - அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்று களித்தான்.

ஏழை எளிய மக்கள் மட்டுமன்று. கள்ளுக்கு இல்லாத களிப்பூட்டும் எழுச்சியும் இன்பமும் பெண் அன்பில் உள்ளன