பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

೭-ಭೂfಹtułರಿ ಎಟಿಎjó g}ಐಹಿಹೆ¤{ph

என்றன் கவலை, இடுக்கண் யாவும் இடைவிடாத நெடுங்கதை உன்றன் இளமை இனிமை யாவும் ஒங்கி அவற்றின் மேல்வாம். ஒன்றின் பின்னும் சார்ந்திடாதே ஒன்றையும் நீ நம்பிடேல் விண்திரைப் பின் காட்சி கோடி விரிந்து பரந்திங் குள்ளதே.

மண்ணில் மீண்டும் கசக்கி எறியும் எண்ணங் கொண்ட விண்ணகம், மண்ணில் கோடி மலர்கள் தம்மை மலரச் செய்யும் நாள்தோறும்; தண்ணிர் உறுஞ்சல்போல் முகில்கள் மண்ணை வாரிச் செல்லுமேல் விண்ணின் தாரை விரும்பினோரின் குருதிவெள்ளம் பொழியுமே. 185

வாய்ப்பு நேரம் வாழ்வில் சிறிய நொடிப்பொழுதே ஆயினும் தோய்ந்து மகிழ்வில் திளைத்துக் களிப்பினோடு கடந்து செல்லட்டும் ஆய்ந்து வைய வாழ்வின் வணிக அங்காடியில் பெற்றது, போந்த வாழ்வுதான்ே அதனைப் போற்றிக் காத்து வைத்திடு.

அவர்கள் சொல்வர், வேட்கை மறுப்பும் பயின்றோர் உலகில் யாவரும் அவலமற்றுச் செத்த பின்னர் உயிர்த்தெழுந்து விடுவராம் உவந்து நாமும் புத்துயிர்க்கு மதுவும் மங்கமைாரொடும் கவலை அற்றுக் களித்திருக்கும் கலைகள் பேணிப் பயிலுவோம்.

90 த. கோவேந்தன்