பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்கலாம் வாழ்வும் இலக்கிலமும்

கரிய மண்கொள் உலகம் முதலாய்க் காரிக் கோள்கள் வரையிலும் உரிய இந்த வையத்துள்ள சிக்கல் யாவும் தீர்த்துளேன் அரிய இந்தச் சிக்கல் முடிச்சை வகை வகையாய் அவிழ்த்துளேன், தெரிந்தவிழ்த்தேன் ஒவ்வொன்றையும்; இறப்பின் முடிச்சில் திகைக்கிறேன். செம்மலர்ச்சீர் காட்டிற் சிறந்த தேக்கு மரங்கள் ஊடு நீ செம்மணித்தேன் மதுவை மங்கை சேர்த்த கையை நெகிழ்த்திடேல், அம்ம, காற்றால் உதிரும் மலர்போல் அழிவிறப்பும் போர்ப்புயல் எந்தக் கணமும் நமை உதிரிக்கும். இன்பவாழ்வை விட்டிடேல். 205

காலன்வந்து கொடிய நஞ்சைக் கையில் கொடுக்கும் முன்னரே ஆலும் துயிலை விட்டெழுவாய், மதுவை மீண்டும் அருந்தவே காலம் என்னும் செருக்கு மிக்க கொடிய உருளைத் திருப்பங்கள் ஞால மீதில் நம்மை ஒருவாய் நீரும் அருந்த விட்டிடா.

புத்துணர்ச்சி போல எழுவேன் பொலியும் மதுப்பால் செல்லுவேன், அத்திப்பழமாய்க் கன்னம் சிவக்க அருந்துவேன் நான் இன்மது, கைத் தலத்திதில் மதுவை ஏந்திக் கனவில் செய்வ தொத்து நான் எத்தனைத் துறைக்கும் அறிவின் உரையின் முகத்தில் அறைகுவேன்.

96 த கோவேந்தன்