பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101

கொள்ளக்கூடிய அந்தப் பிச்சைக்காரன், உமாரிடமிருந்து நன்றாகப் பணம் கறக்கலாம் என்று தெரிந்து கொண்டான்.

“நான் கேள்விப்பட்ட விஷயமிருக்கிறதே. அதைச் சொல்லத்தடையில்லை, ஆனால், மூன்று நாளாகப் பட்டினி கிடக்கிறேன், பசி பொறுக்க முடியவில்லை” என்று இழுத்த மாதிரியாகப் பேசினான். இயந்திரம் போல உமாரின் கைகள் தன் மடியைத் துழாவின, தன் மடியில் ஒரு செப்பு நாணயங்கூட இல்லையென்பதை உணர்ந்து கொண்டான். பிச்சைக்காரனைத் தன்னைத் தொடர்ந்து வரும்படி கூறிச் சைகை காண்பித்துவிட்டு தான் சிறுவயது முதல் அறிந்து வைத்திருந்த ஒரு வட்டிக் கடைக்காரனிடம் சென்றான். கிரேக்க நாணயங்களும், பாக்தாது நாணயங்களும், வட்டமும் சதுரமுமான பல தேசத்து நாணயங்களும் அவனிடம் இருந்தன.

“ஒருமாதத் தவணையில் எனக்கு ஒரு பொன் வேண்டும்” என்றான் உமார்.

“ஒரு மாதத்துக்கு ஒரு வெள்ளிவட்டி கொடுக்க வேண்டும். தெரியுமா?. இது வட்டிக்கடைக்காரனின் வாடிக்கைப் பேச்சு.

“பேச்சை நிறுத்து, பணத்தைச் சீக்கிரம் கொடு” என்று ஒரு பொன்னைச் சட்டென்று வாங்கிப் பிச்சைக்காரன் கையில் கொடுத்து, உனக்கு என்ன தெரியும்? சொல்! சொல்வது உண்மையாக இருக்க வேண்டும்! தெரிகிறதா?” என்று பிச்சைக்காரனை வெளியில் இழுத்துக் கொண்டுவந்தே கேட்டான்.

“நான் பொய் சொன்னால் என் தலையில் இடிவிழட்டும்! மூன்று நான்கு நாட்களுக்கு முன்னாலே அந்தப்பெண், அந்தப்புரத்தில் இருக்காமல் வெளியே போய்ச் சுற்றுவதைக் கண்டித்து வீட்டில் உள்ளவர்கள் அவளை அடித்திருக்கிறார்கள். இப்படித்தான் தண்ணிர் எடுக்க வந்த பெண்கள் பேசிக் கொண்டார்கள். அவளுடைய சிற்றப்பன்தான் அந்த வீட்டில் அதிகாரத்தில் பெரியவன். அவனுக்குக் கோபம் அதிகம்! அவள் அடிபட்ட மறுநாள் அப்துல்சைத் என்ற துணி வியாபாரியிடமிருந்து பெண்கேட்டு ஆள்வந்தது. பிறகு, சிற்றப்பன் அப்துல் சைதுக்கும், சாட்சிகளுக்கும், சாதிக்கும்