பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

நோய் வந்துகிடந்து எழுந்தபிறகு அவன் மூளையில் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டது. இந்த மாதிரி ஊருக்கு ஊர் அலைந்து திரிவது உபயோகமற்றது என்பதை அவன் தெரிந்து கொண்டான். தன் உள்ளத்துக்குள்ளேயே வீற்றிருக்கும் அந்த வேதனையிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஊர் ஊராக ஓடியலைந்ததாக அவனுக்குத் தோன்றியது. எங்கு ஓடினாலும் இருக்கிற வேதனையும் கூடவேதானே வருகிறது என்பது இப்பொழுதுதான் அவனுக்குப் புரிந்தது. இவ்வளவு நாட்களுக்குள் யாஸ்மியிடமிருந்து ஏதாவது செய்தி கிடைத்திருக்க வேண்டும். தன் கோபுரத்திற்கு அவள் நிச்சயம் செய்தி யனுப்பியிருப்பாள். டுன்டுஷ் உடைய ஒற்றர்கள்கூட ஏதாவது கண்டு பிடித்திருக்கலாம். அங்கிருந்து வெளியேறியது எவ்வளவு முட்டாள் தனமாகிவிட்டது. இப்பொழுது திரும்ப நினைத்தாலும் உடனே திரும்ப முடியவில்லை. தேறுவதற்காகச் சிலநாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.


17. தேடித் தேடிக் காணாமல் திரும்பி வந்து சேர்ந்தானே!

பலநாள் கழுதையின் மீது பயணம் செய்து கடைசியாக ஒருநாள் மாலையில் நிசாப்பூருக்கு வந்து சேர்ந்தான் உமார். இடுகாட்டுக்குப் போகும் பாதையில் இறங்கிக் கொண்டு அந்தக் கழுதைக் காரனுக்கு நன்றி கூறினான். பூட்டிக்கொண்டு வந்த தன்னுடைய கோபுரம் எப்படியிருக்கிறதோ என்று எண்ணிக்கொண்டே அதை நோக்கி நடந்தான். எங்கு யாரும் இருக்க மாட்டார்கள், என்று எண்ணினானோ அங்கு அவன் பலப்பல மாறுதல்களையும், பலப்பல புதிய ஆட்களையும் கண்டு வியப்படைந்தான்.

கோபுரத்தைச் சுற்றியிருந்த சுவருக்குள்ளே புதுப்புதுக் கட்டிடங்கள் காட்சியளித்தன. அழகான பல பூஞ்செடிகள் நிறைந்து ஒரு தோட்டம் உருவாகியிருந்தது. இரண்டு தோட்டக்காரர்கள் அங்கே வேலை செய்து கொண்டிருந்தார்கள். கோபுரத்தின் மேலேயிருந்த வரந்தைச் சுவர் ஓரமாக வெண்கலக் கருவிகள் பல ஒளிவீசிக் கொண்டிருந்தன. இன்னும் பலப்பல மாறுதல்களையும் வியப்புடன் பார்த்துக் கொண்டு வெளியே நின்று கொண்டிருந்த உமாரிடம், தாடி வைத்திருந்த