பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109

வேலைக்காரன் ஒருவன் மரியாதையாக வந்து நின்று சலாம் வைத்தான்.

“தலைவரே! தங்கள் வரவு நல்வரவாகுக! தங்கள் வேலையைத் தொடங்குவதற்குரிய எல்லா வசதிகளையும் செய்து வைத்திருக்கிறோம். தயவுசெய்து உள்ளே வருகிறீர்களா?” என்று மிக வினயத்தோடு வரவேற்றான். தூசிபடிந்த மேனியும், அழுக்கடைந்த உடையும், பித்துப் பிடித்தவன் போன்ற தோற்றமும் உடைய உமாரை அந்த வேலைக்காரன் ஏதோ ஒரு விசித்திரமான பிராணியைப் பார்ப்பது போல் பார்த்தான்.

“சரி” என்று சொல்லிவிட்டு உமார் உள்ளே சென்றான். நேராகத் தன்னுடைய பொருள்கள் இருக்கும் கூடத்திற்குச் சென்றான். அங்கேயிருந்த பொருள்கள் அனைத்தும் வைத்தது வைத்தபடியேயிருந்தன. யாரும் எதையும் தொடவேயில்லை. பட்டுத்திரையும் அதில் பொறிக்கப்பட்ட பறக்கும் பாம்பும் அப்படியே முன்போலவே தொங்கிக் கொண்டிருந்தன. அவனுடைய படுக்கையின் ஒரு புறமாகத் தலையணிகள் அடுக்கி வைக்கப்பெற்றிருந்தன.

“ஏதாவது செய்திகள் கிடைத்தனவா? எனக்காக அனுப்பப்பட்ட ஒருசெய்தி வந்து சேர்ந்ததா?” என்று அந்த வேலைக்காரனை உமார் கேட்டான்.

“தலைவரே! தினந்தினமும் டுன்டுஷ் பிரபு அவர்களிடமிருந்து ஒரு செய்திவரும்.தாங்கள் வருகை புரிந்துவிட்டீர்களா? என்ற கேள்வியாகத்தான் அந்தச் செய்தியிருக்கும்! இதோ, இப்பொழுது கூடத்தாங்கள் வந்துவிட்டீர்கள் என்ற செய்தியை, நிசாம்பூரில் தெரிவிப்பதற்காக ஒரு பையனை அனுப்பிவிட்டேன்” என்றான்.

“வேறு எந்தவிதமான செய்தியும் இல்லையா? ஏதாவது கடிதம் கொடுக்கப் படவில்லையா?”

“இல்லை, வேறு எந்தவிதமான செய்தியும் கிடையாது! எந்தக் கடிதமும் இங்குக் கிடைக்கவில்லை.”

பலகணிக்கருகிலே போய், ஒரு தாழ்ந்த நாற்காலியிலே உமார் உட்கார்ந்தான். வேலைக்காரன் ஒரு வெள்ளிக் கூசாவிலே